Headlines News :
Home » » நிர்வாண படத்தை வைத்து செல்வந்தர் மகளை மிரட்டிய முன்னாள் காதலன்

நிர்வாண படத்தை வைத்து செல்வந்தர் மகளை மிரட்டிய முன்னாள் காதலன்

Written By Exams on Friday, April 25, 2014 | 8:02 AM

நிர்வாண படத்தை வைத்து செல்வந்தர் மகளை மிரட்டிய முன்னாள் காதலன்இந்திய அமெரிக்க தொழில் அதிபரான வினோத் கோஸ்லாவின் மகளிடம் நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார். 

இந்திய அமெரிக்கரான வினோத் கோஸ்லா(59) பெரும் பணக்காரர் ஆவார். அவரின் மகள் நீனா கோஸ்லா(26). அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற டக்ளஸ் டார்லோ(27) என்பவரை 2007ம் ஆண்டு சந்தித்து காதலில் விழுந்துள்ளார். 

பின்னர் அவர்கள் 2010ம் ஆண்டு இறுதியில் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் டார்லோ நீனாவுடன் பழகிய காலத்தில் அவரை நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடப்போவதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். 

மேலும் நீனாவின் நிர்வாண படங்களை அவரது தாய் நீருவுக்கு அனுப்பி வைத்து இதை இணையதளத்தில் வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரூ.43 லட்சத்து 72 ஆயிரத்து 290 பணத்தை கோஸ்லா பவுன்டேஷன் தர வேண்டும் என்று கூறி அதை கேட்டுள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது. பொலிசார் வழக்குப்பதிவு செய்து டார்லோவை கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆனால் அவர் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர். 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info