Headlines News :
Home » » மட்டு மாநகர சபையின் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதான திறப்பு விழாவும் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வும் - நேரடி ஒலிபரப்பு

மட்டு மாநகர சபையின் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதான திறப்பு விழாவும் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வும் - நேரடி ஒலிபரப்பு

Written By சித்தேஸ் on Thursday, April 24, 2014 | 9:51 PM

மட்டக்களப்பின் புளியந்தீவுப் பகுதியில் உள்ள வெபர் விளையாட்டு மைதானம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருவதனால் அப்பகுதி மக்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொது விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாமையினால் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேலும் 2014ம் ஆண்டு இப்பிரதேச பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் யாவும் நடாத்த மைதானம் இன்றி தமது பாடசாலைகளுக்குள்ளேயே சிறியளவில் நடாத்தினர்.

இதனைக் கருத்தில் கொண்டு மட்டு மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களின் சிந்தனையில் மட்டு மரநகர சபைக்கு அருகாமையில் புதிதாக ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

தற்பொழுது அதன் பணி முடிவுற்ற நிலையில் 26.04.2014ம் திகதி 'பாட்டாளிபுரம்' விளையாட்டு மைதானம் காலை 9.00 மணிக்கு மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களால் மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து மாநகர சபை உத்தியோகத்தர், ஊழியர்கள் அனைவருக்கும் மென்பந்து சுற்றுப் போட்டியும் பி.ப. 2.00 மணி தொடக்கம் சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.


நேரடி ஒலிபரப்பு....

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info