Headlines News :
Home » » இன்று வடக்கு மாகாணசபைத் தேர்தல் – காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம்

இன்று வடக்கு மாகாணசபைத் தேர்தல் – காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம்

Written By Unknown on Friday, September 20, 2013 | 7:54 PM

சிறிலங்காவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததும், அனைத்துலக சமூகத்தினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருவதுமான வடக்கு மாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்களிப்பு மாலை 4 மணியளவில் நிறைவடையும்.
இந்தத் தேர்தலில், முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக கொண்டு போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது. வடக்கு மாகாணசபையில் உள்ள இரு போனஸ் ஆசனங்கள் உள்ளிட்ட 38 ஆசனங்களுக்காக நடத்தப்படும் இந்தத் தேர்தலில், வாக்களிக்க 719, 356 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில், 16 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 426,703 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்கென 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 53,683 வாக்காளர்கள், 5 பிரதிநிதிகளையும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 75,737 வாக்காளர்கள் 5 உறுப்பினர்களையும் தெரிவு செய்யவுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய, 94,644 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், 68,589 வாக்காளர்கள், இந்தத் தேர்தல் மூலம் நான்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவுள்ளனர்.வெளிமாவட்டங்களில் இருந்து அழைக்கப்பட்ட 250 அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 1400 அரச அதிகாரிகள் இந்தத் தேர்தல் பணியில் ஈடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று, யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் சகிதம், காவல்துறையின் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
38 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் இந்தத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 380 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 91 பேரும், மன்னார் மாவட்டத்தில் 160 பேரும், வவுனியா மாவட்டத்தில் 171 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தம் 906 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info