Headlines News :
Home » , » சிறப்பாக நடைபெற்ற பரத் திருமண வரவேற்பு(படங்கள்)

சிறப்பாக நடைபெற்ற பரத் திருமண வரவேற்பு(படங்கள்)

Written By Exams on Monday, September 16, 2013 | 6:24 PM

சிறப்பாக நடைபெற்ற பரத் திருமண வரவேற்பு(படங்கள்)!!15.09.2013,பரத்தின் திருமண வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
பரதத்துக்கும் துபாயில் வசித்து வரும் மருத்துவர் ஜெஸ்லிக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இது காதல் மணம் மட்டுமல்லாமல் கலப்பு மணமும் என்பதால் பதிவுத் திருமணம் நடத்த முடிவானது. அதன்படி செப்டம்பர் 9ம் திகதி ஹோட்டல் ஒன்றில் பெற்றோர்களுக்கு மத்தியில் எளிமையான முறையில் திருமணும் திருமணப் பதிவும் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.
விழாவில் நடிகர்கள் அர்ஜூன், பார்த்திபன், சூர்யா, சத்யராஜ், மோகன், விமல், அருண் விஜய், செந்தில், விவேக், இயக்குனர்கள் டி.ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்டோரும் மற்றும் நடிகைகள் குஷ்பு, நிரோஷா ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்தி சென்றனர்.
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info