Headlines News :
Home » , » கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் மட்டு. விஜயம்

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் மட்டு. விஜயம்

Written By Exams on Tuesday, September 10, 2013 | 12:10 AM


-தேவ அச்சுதன்

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களை மட்டக்களப்பு விமான நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின்; அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும்  தேவைப்பாடுகள் தொடர்பிலும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.

இதன்போது, நினைவுச்சின்னமொன்றை அபிவிருத்திப் பங்களிப்பு நிர்வாகத்துக்கான விசேட செயலாளர் பி.எஸ்.ராகவனிடம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கையளித்தார்.

அபிவிருத்தி பங்களிப்பு நிர்வாகத்துக்கான விசேட செயலாளர் பி.எஸ்.ராகவன், மேலதிக செயலாளரும் நிதி ஆலோசகருமான ஏ.ஆர்.சிங்கா, மேலதிக செயலாளர் திருமதி சுஜாதா மேத்தா, கட்டடக்கலை நிபுணர் கீர்த்தி சிங்கா, நிதிப்பணிப்பாளர் அனுர சிறிவஸ்தவா ஆகியோர் இந்த விஜயத்தில் உள்ளடங்கியிருந்தனனர்.
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info