வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது, வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வட மாகாணத்தில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநேகமான மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்ததைத் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன், மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பும் ஒரு சில சிறிய அசம்பாவிதங்களுடன், அமைதியான முறையில் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக யாழ்ப்பாணத்தில், கடந்த பிரதேச சபைத் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததை விட மக்கள் மிக அதிகளவில் வாக்களித்தாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேசத்திற்கு தமிழர்களின் முடிவை அறிவிக்கும் தேர்தலாக இது கணிக்கப்பட்டிருந்ததால், மக்கள் தமது ஆணையை வழங்க வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றதாக கூறப்படுகின்றது. கிட்டத்தட்ட 68 வீதம் யாழ்ப்பாணத்தில் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயத்தில், சில இடங்களில் இராணுவ புலனாய்வு பிரிவினர் வாக்களர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் பதியப்பட்டுள்ளன.