நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலின் வாக்குப் பெட்டிகள் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் வாக்களிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது, சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு வீதம் மிகவும் மந்தகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
எனினும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவு வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.
இதனிடையே பல பகுதிகளிலும் பகிரங்கமாக படையினர் வாக்களிக்க வந்த வாக்காளர்களை விரட்டியமை பல்வேறு அடாவடித்தனங்களை மேற்கொண்டபோதும் மக்கள் சுதந்திரமாக உரிமைக்காக வாக்களித்துள்ளனர்.
இன்று மாலை 7 மணிக்கு நிறைவடைந்த நிலையில் பலத்த பாதுகாப்பு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்புடன் வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்ட்டுள்ளது.
மாலை 6.30 மணிக்கு தபால் மூலமான வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளது. இரவு 10 மணிக்குப் பின்னர் யாழ் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.