Headlines News :
Home » , » அவுஸ்ரேலிய நிறுவனம் வழக்கு - விஷால் படத்தை திரையிட ஐகோர்ட் தடை!

அவுஸ்ரேலிய நிறுவனம் வழக்கு - விஷால் படத்தை திரையிட ஐகோர்ட் தடை!

Written By Unknown on Wednesday, September 18, 2013 | 7:51 AM

News Serviceநடிகர் விஷால் நடித்த மதகஜராஜா படத்துக்கு தடை விதித்து, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், வரலட்சுமி நடித்த படம் மதகஜராஜா. இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி, அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தது. அதில் கூறியிருப்பதாவது: மதகஜராஜா படத்துக்கான ஷூட்டிங் வெளி நாட்டில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஜெமினி நிறுவனம் செய்தது. இதற்காக ரூ.44 லட்சத்தை ஜெமினி நிறுவனம் தரவேண்டும். இந்த பணத்தை தராமல் படத்தை திரையிடக்கூடாது. எனவே, படத்தை திரையிட தடைவிதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி சுதாகர் விசாரித்து, மதகஜராஜா படத்தை தயாரித்த ஜெமினி நிறுவனம், மனுதாரருக்கு சேரவேண்டிய தொகையை பாதி செலுத்த வேண்டும். அதன்பிறகு படத்தை திரையிட ஐகோர்ட்டில் அனுமதி பெறவேண்டும். எனவே, அதுவரை படத்தை திரையிட தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info