Headlines News :
Home » » மீண்டும் 3 முகம் காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

மீண்டும் 3 முகம் காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Written By sakara on Tuesday, October 8, 2013 | 5:24 PM

 
'கோச்சடையான்' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளாராம். அதில் வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் ரஜினி பட்டையை கிளப்பியிருக்கிறாராம்.

கோச்சடையான் திரைப்படத்தில் அப்பா, மகன் என்று இரு கதாபாத்திரங்களில்  ரஜினி நடித்துள்ளார் என்றே செய்திகள் வந்தன. இந்நிலையில் அத்திரைப்படத்தில் ரஜினி அப்பா, மகன்கள் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

மூன்று முகம் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இந்த திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் வரும் ரஜினி மிகவும் அப்பாவியாக இருப்பாராம். அப்பா ரஜினிக்கு ஷோபனாக ஜோடியாக நடித்துள்ளார்.

இரு மகன்களில் ஒரு மகன் அர்ஜுனன் போன்று எண்ணம் கொண்ட நல்லவனாக இருப்பாராம். அவருக்கு தான் தீபிகா ஜோடியாம். மற்றொரு மகன் துரியோதனன் போன்ற குணமுள்ள வில்லனாக இருப்பாராம். வில்லனுக்கு ஜோடி இருக்கிறதா இல்லையா என்பதை ரகசியமாக வைத்துள்ளார்களாம்.

வில்லன் மகன் வேடத்தில் ரஜினி பட்டையை கிளப்பியுள்ளாராம். வில்லனாக இருந்தாலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info