Headlines News :
Home » » துண்டாடப்பட்ட ஆணுறுப்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டது (உலகில் முதன்முதலாக இலங்கையில் சாதனை)

துண்டாடப்பட்ட ஆணுறுப்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டது (உலகில் முதன்முதலாக இலங்கையில் சாதனை)

Written By sakara on Tuesday, October 8, 2013 | 5:20 PM

முழுமையாக துண்டாடப்பட்டு 12 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட ஆணுறுப்பு இயங்குவதாகவும் குறித்த நபர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைப்பிரிவின் பிரதான சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் துலிப்பெரேரா தெரிவித்தார்.

குழந்தையொன்றின் தந்தையான புத்தளத்தைச்சேர்ந்த 27 வயதான ஒருவரின் துண்டாடப்பட்ட ஆணுறுப்பே இவ்வாறு கடந்த திங்கட்கிழமை வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

புளோக்கல் உற்பத்தி செய்யும் குறித்த நபரின் ஆணுறுப்பானது விந்தகத்துடனேயே துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் அதனை வெற்றிகரமாக இணைத்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்த சத்திரசிகிச்சை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள்; மேற்கொண்ட பரிசோதனையின் பிரகாரம் நோயாளி தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்து சுகமடைந்து வருகின்றார். இந்த சத்திரசிகிச்சையானது வெற்றியளிக்கவேண்டும் என்பதே சகலரினதும் எதிர்ப்பார்ப்பாகும்.

சத்திரசிகிச்சையின் ஆபத்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துள்ளது. இது கையொன்றிலிருந்து துண்டாக்கப்பட்ட விரலை இணைப்பது போன்றதொரு சத்திரசிகிச்சையல்ல. மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டிய சத்திரசிகிச்சையாகும். 

இந்த நோயாளியின் ஆணுறுப்பானது விந்தகத்துடன் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் அவர் மரணமடையமாட்டாரா என்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

இல்லை, எப்படியும் அவ்வாறு இடம்பெறாது. ஆணுறுப்பு வெட்டப்பட்டுவிட்டால் மரணம் சம்பவிக்காது. என்றாலும் விந்தகத்தை பலமாக அழுத்திபிடித்து முறுக்கினால் அல்லது விந்தகத்தில் பலமான தாக்குதலை மேற்கொள்ளும் போது ஒரே தடவையில் இதயம் துடிப்பது நின்றுவிடுமாயின் மரணம் சம்பவிக்கலாம்.

ஆனால் வெட்டுப்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படாது. சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளி மீண்டும் பாலியல் ரீதியாக முன்பிருந்ததை போல இயங்கமுடியுமா என்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 

எமது உடலில் துண்டிக்கப்பட்ட அவயவங்களை மீண்டும் இணைத்தால் அது முன்பிருந்ததை போல செயற்படாது என்பது எம்மில் பலருக்கு தெளிவாக தெரியும், நோயாளியின் ஆணுறுப்பு விரைப்பு ஏற்படும் வரை எதனையும் சரியாக கூறமுடியாது என்றும் அவர் கூறினார்.

நோயாளி சிகிச்சைபெற்ற வீட்டுக்கு திரும்பும் தினத்தை சரியாக கூறமுடியாது. அவர் சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டார் என்றாலும் யாருடனும் கதைக்கவில்லை. அவர் ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டுள்ளமை வெளிப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

விந்தகத்துடன் முழுமையாக துண்டாடப்பட்டு ஆணுறுப்பை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப்பிரிவு வைத்தியர்கள் குழுவே 12 மணிநேரம் மேற்கொண்ட சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமான நேற்று திங்கட்கிழமை இணைத்துள்ளனர்.
அரிவாள் ஒன்றின் மூலமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு துண்டாடப்பட்ட விந்தகத்துடனான ஆணுறுப்பை இணைப்பதற்கான இந்த சத்திரசிகிச்சை குழுவில் ஒன்பது வைத்தியர்கள் இருந்ததாக தேசிய வைத்தியசாலை தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான சத்திரசிகிச்சையொன்று உலகத்திலேயே மேற்கொள்ளப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்பதே எமது கருத்தாகும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த சத்திர சிகிச்சை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் இந்த  நோயாளி புத்தளம் வைத்தியசாலையிலிருந்தே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். உடல் வேறாகவும் ஆணுறுப்பு விந்தகத்துடன் வேறாகவும் இருந்தது.

அதிகாலை நான்கு மணியளவில் விந்தகம் உடலிலிருந்து வேறாக்கப்பட்டதாகவும் வெட்டுக்காயம் ஏற்பட்ட தெரிவிக்கப்படும் அதேவேளை நான்கு மணிநேரத்திற்கு பின்னரே நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சத்திர சிகிச்சை வெற்றியளிப்பதற்கு நோயாளி வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு எடுக்கப்பட்ட காலம் மற்றும் துண்டிக்கப்பட்ட விந்தகம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட முறைமை முக்கியமானதாக அமைந்தது.

இது உலகத்திலேயே மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சையாகவே நாம் கருதுகின்றோம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
ஒரே அறுவையில் ஆணுறுப்பு விந்தகத்துடன் அறுக்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சையின் போது முதன்முதலில் மூத்திர குழாய் இணைக்கப்பட்டதுடன் அதற்கு பின்னர் ஏனைய நரப்பு தொகுதிகள் இணைக்கபட்டன என்றும் வைத்தியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

விந்தகம் துண்டாடப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் மனைவி பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் அவரே அறுத்துகொண்டாதாக வாக்குமூலமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்;.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info