Headlines News :
Home » » மட்டக்களப்பில் 30 வருடங்களின் பின்னர் பௌர்ணமி தின கலைநிகழ்வு

மட்டக்களப்பில் 30 வருடங்களின் பின்னர் பௌர்ணமி தின கலைநிகழ்வு

Written By sakara on Friday, October 18, 2013 | 6:26 PM


கடந்த 30 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பௌர்ணமி தினமான இன்று பௌர்ணமி தின கலை நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் பௌர்ணமி தின கலை நிகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் தொடர்ந்து இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது.
அரசாங்க அதிபரின் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் முயற்சியால் மீண்டும் 30 வருடங்களின் பின்னர் இன்று பௌர்ணமி தின கலை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாவட்ட கலாசார இணைப்பாளர் மலர்ச்செல்வனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுணதீவுப் பிரதேச செயலக கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் தலைவருமாகிய வெ.தவராசாவின் வரவேற்புடன் வவுணதீவ கலாசார பேரவையின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றது.
கலாசாரப் பேரவையினுடாக நிகழ்த்தப்பட்ட இக் கலை நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் பட்டதாரிப் பயிலுனர்களினால் பிரதேச செயலாளர் வெ.தவராஜாவின் நெறிப்படுத்தலில் தயாரிக்கப்பட்ட பெறN;றார் சிறுவர்களை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு செல்வதனால் இந்தச் சிறுவர்கள் படும் துன்பங்கள் அனுபவிக்கும் வேதனைகள் அதனால் சிறுவர்கள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதனை சித்தரிக்கும் 'அம்மா' வீதி நாடகமும் கன்னன்குடாக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலயம் மண்முனையை மையமாக வைத்து மட்டக்களப்பை சிறிறரசு செய்த இளவரசி உலகநாச்சியினால் கொக்கட்டிச்கோலை தான்தோறீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரினால் அவ் ஆலயம் உடைக்க முற்பட்ட போது கல் நந்தி புல் உண்டு சாணமிட்டு ஆங்கிலேயரை துரத்திய வரலாறு கூறும் :நந்தியின்'மகிமை வரலாற்று தென்மோடிக் கூத்து என்பன் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.முதலாவது பௌர்ணமி கலை நிகழ்வினை மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலக கலாசாரப் பேரவை நிகழ்த்திய நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களின் கலாசாரப் பேரவையினுடாக நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info