எல்லோரும் எதிர்பார்த்ததுபோல முதல்வர் ஜெயலலிதாவும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார். வரும் சட்ட மன்றத் தொடரில் நிச்சயம் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். நிறைவேற்ற வேண்டுமென மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை நேற்று இதழ்களில் வந்துள்ளது.
...
இன்னொரு பக்கம் கார்பொரேட்களும் அரசியல்வாதிகளும் இணைந்து மேற்கொள்ளும் இன்னொரு ஊழலில் பிரதமரின் பெயரும் சந்திக்கு வந்துள்ளது. கார்பொரேட்களுக்கு நிபந்தனைகளின்றி சந்தைகள் திறந்து விட விட வரலாறு காணாத அளவில் ஊழல்கள் பெருகி வருகின்றன. இந்தியாவின் பெருமிதங்களில் ஒன்றான பொதுத் துறை நிறுவனமாகிய நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனுக்கு முழுமையாக உரிமை வழங்குவது என்கிற முடிவு இறுதி நேரத்தில் மாற்றப்பட்டு பிர்லா நிறுவனத்திற்குச் சலுகை வழங்கப்பட்டதால் இன்று அரசுக்குப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் தமிழக கார்பொரேட்களின் தாது மணற் கொள்ளை ஊழல்கள்...
கூடங்குளத்தில் என்னதான் நடக்கிறது என்றே தெரியவில்லை.உடனடியாகச் செயலுக்கு வர இயலாத அளவிற்கு அதில் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிகிறது. Public Accounts Committee (PAC) இந்திய அணு உலைகள் பாதுகாப்பானதாக இல்லை என இப்போது கூடச் சொல்லியுள்ளது.
தேடப்பட்ட முஸ்லிம் "தீவிரவாதிகள்" மூவர் தானாகவே சரணடைந்தனர் என்கிற செய்தி ஒருபுரம் உள்ளபோதே வீர சாகசம் புரிந்து இவர்களைக் கைது செய்ததாக தமிழகக் காவல்துறையினருக்குக் கோடிக் கணக்கில் ரொக்கப் பரிசுகளும் ஏராளமான பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்படியான பரிசுகளுக்காகவும் பதவி உயர்வுகளுக்காகவுமே அத்துமீறல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் இப்படியான நடவடிக்கைகளால் ஏற்படுகின்றன.
இதர மாநிலங்களில் ஆசிரியப் பணி நியமனகளுக்கான 'டெட்' தேர்வில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் வரலாற்று முன்னோடியாக இருந்த தமிழகத்தில் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு, தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இயக்கங்களுக்கு இதுபற்றியெல்லாம் கவலை இல்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவைப் பங்கேற்காமல் செய்வதொன்றே இன்றைய ஒரே பிரச்சினை என்பதுபோல ஒரு சூழல் இன்று கட்டமைக்கப்படுகிறது.
அரசு, கார்பொரேட்கள், இட ஒதுக்கீட்டு எதிரிகள், காவல்துறை, உளவுத் துறைகள் எல்லாம் ஒரு கள்ளச் சிரிப்புடன் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளன.

Post a Comment