Headlines News :
Home » , » சனல்4 ஊடகவியலாளர் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளாரா?

சனல்4 ஊடகவியலாளர் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளாரா?

Written By Unknown on Sunday, October 13, 2013 | 8:47 AM

பிரித்தானியாவின் செனல்4 ஊடகவியலாளர் ஒருவர் நாட்டுக்குள் இரகசியமாக பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஊடகவியலாளரை கண்டு பிடிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு விசேட சோதனைகளை நடாத்த உள்ளது.
செனல்4 ஊடகவியலாளரும் அவரது மனைவியும் கொழும்பில் தங்கியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாதத் தடைப் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர் தற்போது கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருப்பதாக காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஊடகவியலாளரும் அவரது மனைவியும் இலங்கைக்கு அடிக்கடி தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தக நோக்கத்திற்காக குறித்த ஊடகவியலாளர் இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கிலான தகவல்களை குறி;த்த ஊடகவியலாளர்கள் திரட்டி வருகின்றனரா என்பது குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக செனல்4 ஊடகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info