Headlines News :
Home » , » உலகை அச்சுறுத்தும் பால் மணம் மாறாத பிஞ்சுகளின் பரிதாப திருமணம்

உலகை அச்சுறுத்தும் பால் மணம் மாறாத பிஞ்சுகளின் பரிதாப திருமணம்

Written By Unknown on Saturday, October 19, 2013 | 7:46 PM

10 வயதுக்கு மேல் வந்து விட்டால் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் சுதந்திர பறவைகள் மாதிரி. ஆனால் ஆசியாவின் பின் தங்கிய நாடுகளை சேர்ந்த சிறுமிகள் இவ்வயதில் திருமணத்துக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். பால்ய திருமணம் என்கிற கொடுமைக்கு முகம் கொடுக்க நேர்கின்றார்கள்.
ஆயினும் இவ்வாறான அநேக நாடுகளில் பால்ய திருமணம் சட்டத்தால் அனுமதிக்கப்படாத விடயம். ஆனால் உலகத்தில் 510018 சிறுமிகள் இரகசியமாக திருமணம் செய்து கொடுக்கப்பட்டு உள்ளார்கள் என்று தற்போதைய நிலை குறித்த புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மகளை குடும்பத்தில் வைத்திருப்பது குடும்பத்துக்கு சுமை என பெற்றோர் நினைக்கின்றனர். மகளின் வாழ்க்கைச் செலவுகளை கவனிக்க பெற்றோரால் முடிவதில்லை. எனவே மகளை யாருக்காவது கட்டிக் கொடுத்து விடுகின்றார்கள் அல்லது விற்று விடுகின்றார்கள்.
சில நாடுகளில் சமய பாரம்பரியங்கள் பால்ய திருமணத்தை ஏற்றுக் கொள்கின்றன. மகள் வளர வளர பெற்றோருக்கு கவலை வளர்கின்றது. திருமணத்துக்கு முந்திய செக்ஸில் மகள் ஈடுபட்டு விட கூடும் என்றும் அஞ்சுகின்றனர். இதுவும் பால்ய திருமணத்தை ஊக்குவிக்கின்ற காரணிகளில் ஒன்று.
ஆயினும் இத்திருமண வாழ்க்கைகூட மகிழ்ச்சி கொடுப்பதாக சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அமைவதில்லை. ஏனென்றால் கணவனால் குடும்ப வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.
சில பெண்களுக்கு கணவனால் முகத்தில், நாக்கில் அசிற் ஊற்றப்படுகின்றது, மூக்கு வெட்டப்படுகின்றது. மனைவிக்கு வழங்குகின்ற தண்டனைகளை மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்று கணவன் நினைக்கின்றார்
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info