யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 வயதினை உடைய இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ் பிரயோ கத்திற்கு ட்படுத்தப்பட்டுள்ளார்கள். உரும்பிராய் கிழக்கு மற்றும் ஊர்காவற்றுறைநாரந்தனைப் பகுதிகளைச் சேரந்த இரு சிறுமிகளே மேற்படி சம்பவங்களில் பாலியல் துஷ்பி ரயோகத்திற்குட்படுத்தப்பட்டவர்கள் ஆவர்.கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை உரும்பிராய் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை அவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வழக்கினை விசாரணைக்குட்படுத்திய நீதவான், அவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று, ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி 14 வயதும் 8 மாதங்களும் உடைய சிறுமி ஒருவர் அதே இடத்தினைச் சேர்ந்த 21 வயது இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது வழக்கினை விசாரணை செய்த நீதவான் அவரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
- See more at: http://thinakkural.lk/article.php?local/wknf8ryexn11580c048b3a434501oqaza4e49e655c1247efb389cecxrzhz#sthash.U0zLsne8.dpuf

Post a Comment