Headlines News :
Home » » கல்லடி புனித அந்தோனியார் ஆலயம் திறப்பு

கல்லடி புனித அந்தோனியார் ஆலயம் திறப்பு

Written By sakara on Thursday, October 24, 2013 | 2:28 AM

மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தின் நிர்மாண வேலைகளுக்காக உடைக்கப்பட்ட கல்லடி புனித அந்தோனியார் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னைய்யா இந்த புதிய ஆலயத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த வைபவத்தில் இன்னாசியார் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜீவன் ஜீராஜ், அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன், அருட்தந்தை ரமேஸ் கிறிஸ்டி, அருட்தந்தை ஏ.தேவதாசன் உட்பட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னைய்யா திருப்பலியை நடாத்தி அதை ஒப்புக்கொடுத்தார்.

மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தின் நிர்மாண வேலைகளுக்காக பிரதான வீதியிலிருந்த புனித அந்தோனியார் ஆலயம் உடைக்கப்பட்டு தற்போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ளது.

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info