இதனால் குறித்த கல்லூரி வளாகத்தில் தற்போது பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அங்கு பொலிசார் விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கல்லூரிக்கு இன்று (29) காலை விஜயம் செய்த வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் சில வகுப்புக்களுக்கு சென்று பரிசோதனை செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது சில ஆசிரியர்கள் பிரதி கல்வி பணிப்பாளரிடம் அதிருப்தியினை தெரிவித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே பதில் கடமையில் இருந்த பிரதி அதிபர் மீது அவர் தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிய வருகிறது.
தாக்குதலுக்கு இலக்கான பிரதி அதிபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கல்லூரியில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது.
பிரதி அதிபர் மீதான தாக்குதலை அடுத்து சிலர், பிரதி கல்வி பணிப்பாளரின் மோட்டார் வாகனத்தை அடித்து நொருக்கி முற்றாக சேதப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் கல்லூரி அதிபரின் காரியாலயத்தில் இருந்து பிரதி கல்வி பணிப்பாளர் வெளியேறிச் செல்ல முடியாதவாறு மாணவர்கள் திரண்டு சுற்றி வளைத்துள்ளனர். அத்துடன் மாணவர்கள் கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த வலய கல்வி காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் அங்கு சுமூக நிலையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் தற்போதுவரை பிரதி கல்வி பணிப்பாளரை கல்லூரியில் இருந்து பாதுகாப்பாக வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலையில் பொலிசார் அங்கு குவிந்து காணப்படுகின்றனர்.
Post a Comment