இந்நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் சற்று வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது.
உடலில் மலைப்பாம்புகளை தவழ விடப்பட்டு செய்யப்படும் இந்த மசாஜ் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளதாக இந்த நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பும் பெருகியுள்ளது, ஏராளமான மக்கள் இந்த மசாஜ் நிலையதிற்கு வந்து குவிகின்றனர்.
இங்கு பயன்படுத்தப்படும் பாம்புகள் அனைத்தும் விஷத்தன்மை இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment