அடுத்த பாய்ச்சலுக்கு அஜீத் தயார்.
பைக்ரேஸ் விவகாரங்களை எல்லாம், அஜீத், இப்போது, ஒத்தி வைத்து விட்டார் போலிருக்கிறது.
தன் முழு கவனத்தையும், சினிமா மீது திருப்பியுள்ளார். அடுத்தடுத்து, படங்களில் நடிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆரம்பம் படப் பிடிப்பு முடிவடைந்து, தீபாவளியின்போது, படம் திரைக்கு வரவுள்ளது.
தற்போது, வீரம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம், பொங்கலுக்கு திரைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம், பொங்கலுக்கு திரைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போதே, அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தையை அஜீத் துவக்கி விட்டாராம்.
பிரபல இயக்குனர் ஒருவருடன், அடுத்த படம் குறித்து, அஜீத் பேசிவருவதாக கூறப்படுகிறது.
விரைவில், அஜீத்தின் அடுத்த பாய்ச்சலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
இனி, அஜீத் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Post a Comment