இவரது காணிக்குள் நேற்றுமுன்தினம் அத்துமீறி நுழைந்த வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி புத்தர் சிலையை வைத்துள்ளார் என்று கல்குடா பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்துள்ளதாக ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் தெரிவித்தார். பிரித்தானிய ஆட்சியில் லெப்பைத் தம்பி ஹாஜியார் என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட இக்காணி பின்னர் அவரது மருமகனான ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் என்பவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு பாடசாலை மாணவர்கள் விளையாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையிலயே புத்தர் சிலை தென்னந்தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment