Headlines News :
Home » » தன்னந்தனியாக தன்பாட்டுக்கு சுற்றும் கிரகம்

தன்னந்தனியாக தன்பாட்டுக்கு சுற்றும் கிரகம்

Written By sakara on Thursday, October 10, 2013 | 8:18 AM

தன்னந்தனியாக தன்பாட்டுக்கு சுற்றும் கிரகம்ஒரு கிரகம் தனியாக, துணைக்கு ஒரு நட்சத்திரம் கூட இல்லாமல் தன் பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த கிரகம், சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ளது. இந்த கிரகத்தைச் சுற்றிலும் எதுவுமே இல்லையாம். அது மட்டுமே மிதந்து கொண்டிருக்கிறதாம். 

இந்தநிலையில் ஒரு நட்சத்திரம் கூட இல்லாமல், ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் ஆச்சரியத்துடன் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர். 

PSO J318.5-22 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள, மேலும் இந்த கிரகம் முழுக்க வாயுக்களால் நிரம்பியுள்ளது. 

ஜூபிடர் கிரகத்தை விட 6 மடங்கு அதிக எடையுடன் இது உள்ளது. 1.2 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த கிரகம் உருவானதாம். எனவே இந்தக் கிரகத்தை புதிதாகப் பிறந்த குழந்தை என்று விஞ்ஞானிகள் செல்லமாக கூறுகின்றனர். 

இதுகுறித்து ஹவாய் பல்கலைக்கழக ஆய்வுக் குழுத் தலைவர் மிக்கல் லியூ கூறுகையில், இதற்கு முன்பு எந்த ஒரு நட்சத்திரமும் இல்லாமல் தனியாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதில்லை. எனவே இது வித்தியாசமாக இருக்கிறது. 

இதன் குண நலன்களை ஆராய்ந்து வருகிறோம். இந்த கிரகம் தனியாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது என்றார். 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info