Headlines News :
Home » » முன்னணி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் பதவிப்பிரமாணம்

முன்னணி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் பதவிப்பிரமாணம்

Written By sakara on Thursday, October 10, 2013 | 8:16 AM

விளையாட்டுக்கு தபாலும் இன்னும் சிலருக்கு பலதும்..
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் இன்று (10) பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்றது. இதில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் புதிய பிரதி அமைச்சர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். 

புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு: 

01.சனத் ஜயசூரிய - தபால் சேவைகள் பிரதி அமைச்சர் 

02.லக்ஷமன் பெரேரா - தொழில் மற்றும் வணிக பிரதி அமைச்சர் 

03.சரத் வீரசேகர - தொழில் மற்றும் தொழில் தொடர்பு பிரதி அமைச்சர் 

04.வை.ஜி.பத்மசிறி - விவசாயத்துறை பிரதி அமைச்சர் 

05.என்டனி விக்டர் பெரேரா - தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சர் 

06.ஹேமால் குணசேகர - நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் 

07.மொஹான் லால் கிரேரு - பிரதிக் கல்வி அமைச்சர் 

08.நிஷாந்த முத்துஹெட்டிகம - சிறு பயிர் ஏற்றுமதி அபிவிருத்தி 

09.சரத் முத்துகுமாரன - புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info