மேலும், அவர் நடிபபில் உருவாகி வந்த எதிரி எண் 3 உள்பட சில படங்கள் ட்ராப்பாகி விட்டன.
இதனால் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக தற்போது நம்பியார் என்ற படத்தை தானே தயாரித்து நடிக்கிறார் ஸ்ரீகாந்த்.
கூடவே தற்போதைய இளவட்ட நடிகர்கள் பலரும் சந்தானத்துடன் கூட்டணி வைப்பது போன்று இப்படத்தில் ஸ்ரீகாந்தும் சந்தானத்துக்கும் தனக்கு இணையான வேடம் கொடுத்திருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் நம்பியார் என்ற டைட்டில் வேடத்திலேயே சந்தானம்தான் நடிக்கிறார்.
இந்த நிலையில், தற்போது சந்தானத்தை இப்படத்துக்காக ஒரு பாடலையும் பாட வைத்திருக்கும் ஸ்ரீகாந்த், அதை ஆகா ஓஹோவென்றும் புகழ்ந்து பேசி வருகிறார்.
மேலும், இப்போது சந்தானம் தொட்டதெல்லாம் ஹிட்டாகி வருவதால், இந்த படம் எனக்காக இல்லையென்றாலும் சந்தானத்துக்காகவாவது கண்டிப்பாக ஓடும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார் ஸ்ரீகாந்த்.
Post a Comment