Headlines News :
Home » » நடிகைகளுடன் பேசக்கூட பயமாக உள்ளது! – ஜெய்

நடிகைகளுடன் பேசக்கூட பயமாக உள்ளது! – ஜெய்

Written By Unknown on Tuesday, October 8, 2013 | 11:45 PM

‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு ஜெய் கமிட்டான படங்களில் ஒன்றுதான் ‘திருமணம் என்னும் நிக்கா’. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்துக்காகத்தான் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வரப்பட்டார் நஸ்ரியா நசீம்.
அதன்பிறகுதான் மளமளவென்று பல படங்களில் அவர் கமிட்டானார். அதோடு பின்னர் அவர் நடித்த நேரம், ராஜா ராணி போன்ற படங்கள் வெளியாகி இப்போது அவரை முன்னணி நடிகையாக்கி விட்டது.
இந்த நிலையில், திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்தபோது ஜெய்-நஸ்ரியா இருவருக்குமிடையே காதல் தீ பத்திக்கொண்டதாக கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பரபரப்பு செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, காதல் கதையில் நடித்தால் உடனே நிஜத்திலும் காதல் வந்து விடுமா? என்று நம்மைப்பார்த்து கேள்வி கேட்கிறார்.
மேலும், நான் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த பிறகும் அப்படித்தான் அஞ்சலியுடன் எனக்கு காதல் வந்திருப்பதாக கூறப்பட்டது. அதோடு, அவர் திடீரென்று ஒருநாள் மாயமானபோது முதலில் என்னைத்தான் கேட்டார்கள்.
நல்லவேளை அன்று நான் சென்னையில் இருந்தேன். அப்படி இல்லாமல் நானும் அவுட்டோர் எங்காவது சென்றிருந்தால் உண்மையில் நானும், அஞ்சலியும்தான் தலைமறைவாகி விட்டதாக உறுதியாக சொல்லியிருப்பார்கள்.
நல்லவேளையாக தப்பினேன் என்று சொல்லும் ஜெய், சமீபகாலமாக உடன் நடிக்கும் நடிகைகளுடன் இணைத்து என்னைப்பற்றி காதல் செய்திகள் பரவி வருவதால், நட்பாக நடிகைகள் என்னிடம் பழகினால்கூட விலகி விலகியே செல்கிறேன்.
சும்மா பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாலே காதல் கல்யாணம் என்று கதை எழுதி விடுவார்களோ என்ற பயம்தான் இதற்கு காரணம் என்கிறார் ஜெய்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info