உங்களுக்கு சில நேரங்களில் இரண்டு Facebook கணக்குகளில் Log In செய்ய வேண்டிய தேவை வரலாம். அதற்கு நீங்கள் வேறு ஏதாவது Web Browserகளை பாவிப்பீர்கள். அல்லா விடின் உங்களுடைய முதலாவது Facebook கணக்கை Log Out செய்துவிட்டு உங்களுடைய இரண்டாவது கணக்கை Log In செய்வீர்கள். ஆனால் Google Chrome இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்யலாம். அது எப்படி என்று பார்ப்போம்.
உங்களுடைய Google Chromeனை திறந்து வலது பக்கத்தில உள்ள Setting Icon ஐ Click செய்யவும். அதில் மூன்றாவதாக உள்ள New Incognito Window இல் Click செய்யவும். அல்லது உங்கள் Key board இல் Ctrl+Shift+N என்பதை அழுத்தவும்.
பின்பு கீழ் உள்ளவாறு ஒரு window தோன்றும். அதில் Facebook தளத்திற்கு சென்று உங்களுடைய இரண்டாவது Facebook கணக்கை Log In செய்து இரண்டு Facebook கணக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
தமது வருகைக்கு நன்றி....
தொடர்ந்தும் இணைந்திருங்கள் www.menagam.com
Post a Comment