Headlines News :
Home » , » கமலினி அக்காவுக்கு பேஸ் புக்கில் கவிதை!

கமலினி அக்காவுக்கு பேஸ் புக்கில் கவிதை!

Written By sakara on Friday, November 1, 2013 | 8:03 PM

ஊமையாக மாறிய அறிவிப்பாளர், தாயாக மாறிய மகன்! என்கிற தலைப்பில் தாய்நாடு தளத்தில் அறிவிப்பாளர் கமலினி செல்வராசனின் இன்றைய அவல நிலை தொடர்பாக வெளியான செய்தி பல்லாயிரம் வாசகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
இவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கின்றமைக்கு குறிப்பாக மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றமைக்கு சில நல்ல உள்ளங்களும் முன்வந்து உள்ளன.
தாய்நாடு செய்தியை வாசித்த விநாயகமூர்த்தி விஜய் என்கிற அன்பர் பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் ஆற்றாமையை கவிதையாக பதிவு செய்து சென்று உள்ளார். படித்துப் பாருங்கள்.


எட்டு திசையும்
தொட்டு சென்ற
குரல் ,,,
விட்டு போனதும்
விழிகள் தேடிய
முகம் ,,,
மெல்லிய ஓசையில்
மேனி சிலுக்க வைக்கும்
தமிழ் ,,,
மாலை பொழுதில்
மனங்களில்
மாளிகை கொள்ளும்
மங்கை நீங்கள் ,,,,,
சோகங்கள் நெருங்க
சோர்வும் உங்களில்
தொடர ,,,
கூடிய கூட்டமெல்லாம்
கூடு விட்டு பிரிய ,,,,
கவலையும் கண்ணீரும்
உங்களில் காண ,,,
கஷ்டமா உள்ளது
கமலினி அக்காவுக்கா இது என்று ,,,,,,
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info