Headlines News :
Home » » ஜோசப் பரராஜசிங்கத்தின் 8வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

ஜோசப் பரராஜசிங்கத்தின் 8வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

Written By sakara on Sunday, December 22, 2013 | 11:58 PM

ஜோசப் பரராஜசிங்கத்தின் 8வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்இலங்கை தமிழரசுக் கட்சயின் முன்னாள் உப தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, அமரர். ஜோசப் பரராஜசிங்கத்தின் 8வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் எதிர்வரும் 25ம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளன. 

அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியினரால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் கி.சேயோன் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 

இதில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி.ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு, கல்லடி காயத்திரி பீட சிவஸ்ரீ.சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம்;, கி.துரைராஜசிங்கம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, இ.நித்தியானந்தம், உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info