கிழக்கு மாகாணத்தில் அதிகாரிகளில் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய சேவை நிலையங்களில் கடமையேற்கவுள்ளனர்.
இதற்கிணங்க கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். உதயகுமார் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எஸ். சிவநாதன் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளராகவும் கடமையேற்கவுள்ளனர்.
புதிய கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா நிந்தவூர்பிரதேச செயலகத்திற்கும் நிந்தவூர் பிரதேச செயலாளர் றிபா உம்மா ஜெலீல் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கும் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கும் சம்மாந்துறை செயலாளர் ஏ.மன்சூர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் பெற்று கடமையேற்கவுள்ளனர்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக கடமையேற்கவுள்ள அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீமின் வெற்றிடத்திற்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகத்தினால் இடமாற்றம் பெற்ற கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி புதிய சேவை நிலையங்களில் கடமையேற்கவுள்ளனர். இதற்கேற்ற வகையில் இடமாற்ற உத்தியோகத்தர்களுக்கு விடுவிப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன
Post a Comment