Headlines News :
Home » , » ஒரே தடவையில் மூன்று குழந்தை பெற்ற குடும்பத்திற்கு நெஸ்லே நிறுவனம் உதவி

ஒரே தடவையில் மூன்று குழந்தை பெற்ற குடும்பத்திற்கு நெஸ்லே நிறுவனம் உதவி

Written By AKSHAYAN on Saturday, January 4, 2014 | 9:53 PM

ஒரே தடவையில் 03 குந்தைகளைப் பெற்றெடுத்த மாவடிவேம்பில்வசிக்கும் தமிழ்செல்வன் - றேணுகா  குடும்பத்தினருக்கு  நெஸ்லே நிறுவனம் இரண்டு வருடங்களுக்கான பால்மா உதவியை வழங்க முன்வந்துள்ளது.

 

 செங்கலடி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மிகவும் வறுமைநிலையில் இருக்கும் மேற்படி குடும்பத்திற்குறிய பால்மாக்களை நெஸ்லே நிறுவனம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன் முதல் தடவையாக ஒரு தொகை பால்மா பக்கற்றுகளையும்  வழங்கிவைத்தனர். உதவியினை வழங்கி வைக்கும் நிகழ்வில் நெஸ்லே நிறுவன அதிகாரிகள், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர்  க.லிங்கேஸ்வரன் மற்றும் குறிப்பிட்ட தாயின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
 
நெஸ்லே நிறுவனத்தின் உதவியை பிரதேச செயலாளர் அவர்களும் மாவடிவேம்பு கிராமமக்களும் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். 






Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info