Headlines News :
Home » , » கோராவளியில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி திட்ட கலந்துரையாடல்

கோராவளியில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி திட்ட கலந்துரையாடல்

Written By AKSHAYAN on Friday, February 14, 2014 | 12:44 AM


வாழ்வின் எழுச்சி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2014ஆம்  ஆண்டுக்கான வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13.02.2014)  மட்டக்களப்பு மாவட்ட  அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கோராவளி ஆயிலையடிச்சேனையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில்  கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் , கிரான் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு சபேசன், கோறளைப்பற்று தெற்கு, ஏறாவூர்பற்று திவிநெகும திட்ட இணைப்பாளர் ஆ.தேவராஜா,  கிராம சேவை உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உத்தியோகத்தர்கள் , மாதர் சங்கம் கிராம அபிவிருத்தி சங்கம் இபாடசாலை அதிபர்கள் மற்றும் கோராவளி, பூலாக்காடு, குடும்பிமலை, திகிலிவெட்டை, முறுத்தானை, பேரில்லாவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களும் கலந்து கொண்டனர்.


Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info