மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் 250 புள்ளிகளைப்பெற்று நீலநிறமான நல்லையா இல்லம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிகள் இந்துக்கல்லூரி மைதானத்தில் பாடசாலை அதிபர் கே.அருட்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.உதயகுமார் பிரதம அதிதியா கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மண்முனை மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன்,மாநகர பிரதி ஆணையாளர் தனஞ்செயன்,கோட்டக்கல்வி அதிகாரி சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்டதுடன் ஒலிப்பிக் சுடரேற்றும் நிகழ்வும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை சிறப்பாக நடைபெற்றது.பாடசாலையின் நல்லையா இல்லம்,சோமசேகரம் இல்லம்,குணசேகரம் இல்லம்,இராஜகாரியம் இல்லம் ஆகிய இல்லங்களின் மாணவர்கள் இந்த அணிவகுப்பு மரியாதையை செலுத்தியதுடன் அதனை அதிதிகளும் ஏற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றதுடன் ஆசிரியர்கள்,பெற்றோருக்கான பல்வேறு சுவட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து பழையமாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இந்த ஆண்டின் சிறந்த இல்லத்துக்கான பரிசும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த ஆண்டின் சிறந்த இல்லமாக தெரிவுசெய்யப்பட்ட நீலநிறமான நல்லையா இல்லம் முதலாவது இடத்தினையும் இரண்டாம் இடத்தினை சிவப்பு நிறமான சோமசேகரம் இல்லமும் தெரிவுசெய்யப்பட்டு வெற்றிக்கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Post a Comment