Headlines News :
Home » » மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டுச் செயற்றிட்டம்

மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டுச் செயற்றிட்டம்

Written By சித்தேஸ் on Tuesday, April 1, 2014 | 2:22 AM


மேற்படி நிகழ்வு மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வரியிறுப்பாளர் சங்கம் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து 31.03.2014 காலை 7.00 மணிக்கு சமய சமூகப் பிரமுகர்களின் பிரசன்னத்துடன் சிவானந்தா மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வானது நாவற்குடா பொதுச் சுகாதார பரிசோதகர் பகுதியில் உள்ள கல்லடி உப்போடை, நொச்சிமுனை, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் ஆகிய பகுதிகள் 08 வலயங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வலயத்திற்கும் 15 பேர் அடங்கிய குழுக்கள் வீடு வீடாக பரிசோதித்ததுடன் 20 திண்மக் கழிவகற்றும் வாகனங்களுடன் 125 தொழிலாளிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். பொது இடங்கள் மாநகர சபையினரால் துப்பரவு செய்யப்பட்டன.

2000ற்கும் மேற்பட்ட வீடுகளில் களப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் இதில்  டெங்கு நுளம்புக் குடம்பிகள் அவதானிக்கப்பட்டு 47 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. மேலும் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அறிவித்தலுடன் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
மேலும் டெங்கு நுளம்பு பரவக்கூடிய நிலையில் கவனிப்பாரற்று இருந்து அடையாளம் காணபட்ட 24 வெற்றுக்காணிகள் மாநகர சபையினால் பொறுப்பெற்கப்பட்டு 'இக்காணி மட்ஃமாநகர சபைக்குச் சொந்தமானது' எனும் பெயர்ப் பலகை நாட்டப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டது.

மேலும், வீதிகளில் திரிந்த பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய கட்டாகலி மாடுகள் மாநகர சபை ஊழியர்களினால் பிடித்துக் கட்டப்பட்டது.

இறுதியாக மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மாலை 5.00 மணியளவில் சிவானந்தா மைதானத்தில் ஒன்று கூடியதுடன் மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களால் இந்நிகழ்விற்கு கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் அவர்களை கௌரவித்து; சான்றிதழ்களும் வழங்கி வைத்தார்.
















Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info