களுத்துறை புளத்சிங்கள பாஹியன்கல பிரதேசத்திலுள்ள குகை ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு 12 ஆயிரம் வருடங்கள் பழைமையானது என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கால நிர்ணய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனித எலும்புக் கூடு நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் ஆய்வு கூடமொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இதன் கால நிர்ணயம் அனுமானிக்கப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட இந்த எலும்புக் கூட்டினை பிரித்தானியாவின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்தி பொருட்கள் கண்டுப்பிடிப்பு
இலங்கையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகளும், அவர்கள் மட்பாண்டங்களை பயன்படுத்தியமக்கான சாட்சியங்களும் தொல் பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஹல்துமுல்லை வே-எலிய வல்மீதலாவ உணுகல குகையில் மேற்கொள்ளப்பட்ட தொல் பொருள் ஆராச்சியில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
தனியங்களை அரைக்கும் கற்கள், எரியூட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பன குகையில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.
கண்டுப்பிடிக்கப்பட்ட மட்குடங்களின் பாகங்கள் மிகவும் தரமானதாக இருந்து. குடங்களை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களில் பாகங்களும் குகையில் இருந்தன.
குறித்த குகையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் மிகவும் திட்டமிட்டு தமது வாழக்கையை நடத்தியுள்ளதை காணமுடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

