Headlines News :
Home » , » வாகரை மதுரங்குளம் கிராமத்தில் சுழல்காற்று : 49 வீடுகளுக்கு சேதம்

வாகரை மதுரங்குளம் கிராமத்தில் சுழல்காற்று : 49 வீடுகளுக்கு சேதம்

Written By Exams on Wednesday, September 4, 2013 | 3:44 AM

வாகரை மதுரங்குளம் கிராமத்தில் சுழல்காற்று : 49 வீடுகளுக்கு சேதம்மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளம் கிராமத்தில் வீசிய சுழல்காற்றினால் 49 வீடுகள் சேதமடைந்துள்ளன. 

மதுரங்குளம் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. அத்துடன் பலத்த காற்றும் வீசியது. 

இதன்போது வீட்டுக் கூரைகளுக்கு இடப்பட்டிருந்த தகரங்களும் ஓடுகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டதாக மக்கள் கூறினர். 

பலத்தகாற்றினால் குறித்த பகுதியில் 06 வீடுகள் முழுமையாகவும் 43 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மதுரங்குளம் கிராம அலுவலகர் சீ.கஜேந்திரன் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவியளிப்பதற்கான நடவடிக்கையை கோறளை வடக்கு பிரதேச செயலகமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info