Headlines News :
Home » , » நொக்கியாவை கொள்வனவு செய்தது மைக்ரோசொப்ட்

நொக்கியாவை கொள்வனவு செய்தது மைக்ரோசொப்ட்

Written By Exams on Wednesday, September 4, 2013 | 5:02 AM

நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த விடயமொன்று தற்போது நடந்து விட்டது.
ஆம், மைக்ரோசொப்ட்டானது நொக்கியாவின் மொபைல் போன் பிரிவை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதுடன் நொக்கியா இவ் ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 5.4 பில்லியன் யூரோக்களுக்கு நொக்கியாவின் மொபைல் வியாபரப் பிரிவினை மைக்ரோசொப்ட் கொள்வனவு செய்யவுள்ளது.
இதில் 3.79 பில்லியன் யூரோக்கள் 'டிவைஸ்' பிரிவுக்கும், 1.65 பில்லியன் யூரோக்கள் காப்புரிமைக்கும் என வழங்கப்படவுள்ளது.

மேற்படி ஒப்பந்தமானது 2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உறுதிசெய்யப்படும் எனத் தெரிகின்றது.
எனினும் நொக்கியாவின் பங்குதாரர்கள், ஒழுங்குபடுத்தல் குழுக்கள் என பலரின் அனுமதியினை இது பெறவேண்டியுள்ளது.
மேலும் இதன்போது 32,000 நொக்கியா நிறுவன ஊழியர்கள் மைக்ரோசொப்டிற்கு மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இதில் பின்லாந்தில் உள்ள 4700 ஊழியர்களும், உலகம் பூராகவும் 18,300 ஊழியர்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை நொக்கியா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஸ்டீபன் இலோப் மைக்ரோசொப்டின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மைக்ரோசொப்டின் தற்போதைய பிரதான நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் பால்மர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஓய்வை அறிவித்திருந்தார்.
நொக்கியா நிறுவனமானது சந்தையில் அப்பிள், செம்சுங் போன்ற நிறுவனங்களுடன் போட்டி போடமுடியாமல் திண்டாடி வருகின்றது.
கடந்த சில வருடங்களாக நீடித்து வரும் இந்நிலையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info