Headlines News :
Home » , » விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உட்பட ஐவர் கைது (படங்கள் இணைப்பு)

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உட்பட ஐவர் கைது (படங்கள் இணைப்பு)

Written By Exams on Sunday, September 15, 2013 | 8:54 AM

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உட்பட ஐவர் கைதுபெந்தோட்டை அடகங்தொட பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்றை நடத்திச் சென்றமை தொடர்பில் 4 பெண்கள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேற்றையதினம் (14) பெந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களையடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர். 

குறித்த விபச்சார விடுதியை நடத்திச் சென்ற ஆண் ஒருவரும், இதற்கு உதவியாக இருந்த, 39, 26, 32 வயது மதிக்கத்தக்க 4 பெண்களுமே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ஆண் அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 

அத்துடன் நான்கு பெண்களும் அஹங்கம, தர்க்கா நகர், கொடகாவெல மற்றும் அக்குனுகொலபெலச ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 

சந்தேகநபர்கள் இன்று (15) பலப்பிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info