சித்தாண்டியிலுள்ள
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் திங்கள் கிழமை
(16.09.2013)தொடக்கம் இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும்
மாணவர்களுக்கான விசேட செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
கடந்த
12.09.2013 அன்று பெற்றோர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது
இதுதொடர்பான பெற்றோர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன. பாடசாலை அதிபர்
திரு. தி.ரவி அவர்களினால் இத்திட்டம் பாட ஆசிரியர்களின் துணையுடன்
மேற்கொள்ளப்பட விருக்கின்றது.
இத்திட்டத்திற்கமைவாக
திங்கள் தொடக்கம் வெள்ளி வரையிலான பாலப்பகுதியில் காலை 6.30 - 7.30
வரையிலும், பிற்பகல் 1.30 தொடக்கம் 3.00 வரையிலும் விசேட வகுப்புகள்
நடாத்தப்படுவதுடன் சனிக்கிழமைகளில் காலை 8.00 - 12.00 மணி வரையிலும்
வகுப்புகள் நடாத்தப்படும்.
திங்கள்
தொடக்கம் சனிவரையிலான நாட்களில் தினமும் 6.30 - 8.00 மணிவரையிலான
நேரத்தில் மாணவர்களின் சுயகற்றலுக்கான நேரமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தினமும் 5.00 மணி தொடக்கம் கணித வகுப்பு நடைபெறும் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த
வருடத்தில் மாணவர்களின் பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்திருந்தமையினை அவதானித்த
புதிய அதிபர் இத்தகைய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த
முன்வந்திருக்கின்றார். இச்செயற்றிட்டமானது மாணவர்களின் ஓய்வு மற்றும்
பிரத்தியேக வகுப்புகளுக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் நேரம்
ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.