Headlines News :
Home » » வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது இலங்கை தமிழரசுக் கட்சி

வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது இலங்கை தமிழரசுக் கட்சி

Written By sakara on Saturday, September 21, 2013 | 7:16 PM

TNAவட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி  30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக)  கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது.
இதுதவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
யாழ் மாவட்டத்தில் 213,907 வாக்குகளை மொத்தமாக பெற்ற தமிழரசுக் கட்சி  14 ஆசனங்களைக் கைப்பற்றியது.
இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தினை முற்றாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர வட மாகாணத்தின் மற்றைய மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு,

மன்னார் :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

கிளிநொச்சி :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

முல்லைத்தீவு :
இலங்கை தமிழரசுக் கட்சி   - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

வவுனியா :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2

Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info