Headlines News :
Home » , » தமிழ் பெண்னை கரம்பிடித்த முஸ்லீம் இளைஞர்

தமிழ் பெண்னை கரம்பிடித்த முஸ்லீம் இளைஞர்

Written By Exams on Monday, September 9, 2013 | 4:16 AM

மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் கொண்டிருந்த காதல் காரணமாக முஸ்லீம் ஆசிரியர் ஒருவர் நேற்று(8.9.2013) இந்துமத முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுக்கும் நேற்று(8.9.2013) ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் நடைபெற்றது.

குறித்த முஸ்லீம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார்.
இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் அவர்களின் தலமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவுத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.


இது குறித்த மேலும் தெரியவருவதாவது

ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியர் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுடன் நீண்ட நாள் காதல் கொண்டிருந்த முஸ்லீம் ஆசிரியர் குறித்த தமிழ் பெண்ணை திருமணம் செய்வதற்கு இணக்கம் தெரிவித்து அவர் இந்துமதத்தை தழுவிக்கொண்டுள்ளார்.

இதன் படி இவர்களுக்கான திருமணத்தை இந்துமத முறைப்படி செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் மோகன் அவர்கள் நடாத்திவைத்துள்ளார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info