Headlines News :
Home » , » பாம்பு கடிக்கு இலக்காகி சாதாரண தர மாணவன் பலி

பாம்பு கடிக்கு இலக்காகி சாதாரண தர மாணவன் பலி

Written By Exams on Wednesday, September 4, 2013 | 3:38 AM

பாம்பு கடிக்கு இலக்காகி சாதாரண தர மாணவன் பலிமட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் மாணவன் ஒருவன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். 

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கா.பொ.த.சாதாரண தரம் கற்று வரும் மாங்காடு எல்லை வீதியை சேர்ந்த வீரசிங்கம் டிலக்ஸன் (16வயது) என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு தீண்டிய நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டிலக்ஸன், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்தநிலையில் நேற்று திங்கட்கிமை மாலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info