அனைவருக்கும் குட்மார்னிங்” விண்வெளியில் இருந்து பேசிய முதல் ரோபோட்
விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட ரோபோட், தனது முதல் வார்த்தையை பதிவு செய்தது.ஜப்பானால் உருவாக்கப்பட்ட கிரோபோ என்ற ரோபோட், தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.
அகன்ற கண்களுடன் பெரிய காதுகளையும் கொண்ட இந்த ரோபோட், விண்வெளியில் இருந்த படியே பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு காலை வணக்கம் தெரிவித்தது.இந்த ரோபோட்டின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.முதலில் ஜப்பான் மொழியில் பேசத் தொடங்கிய போது, பூமியில் உள்ள அனைவருக்கும் குட்மார்னிங், நான் தான் கிரோபோ, நான் தான் உலகின் முதல் விண்வெளி ரோபோட் வீரர் என்று தெரிவித்தது.
இதற்கு முன்னதாக நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்குக்கும் அஞ்சலி செலுத்தியது.கடந்த மாதம் 4ம் திகதி பூமியை விட்டு கிளம்பிய ரோபோட்டின் உயரம் 34 சென்டிமீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment