இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் விற்கப்படும் பிரபலமான கபாப் இறைச்சி தரமில்லை என்று புகார்கள் வருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி கைபர் பக்துன்கவா மாகாண தலைமை செயலர் உள்பட பல அரசு துறை அதிகாரிகளுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பல பகுதிகளில் சப்ளி கபாப் என்ற இறைச்சி உணவு விற்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த கபாப் தரமற்றதாகவும், மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் தயாரித்து விற்கப்படுகின்றன என்று செய்திகள் வெளியாயின.
அந்த செய்திகளின் அடிப்படையில் பெஷாவர் ஐகோர்ட் தலைமை நீதிபதி தோஸ்த் முகமது கான், தானே வழக்காக எடுத்து கொண்டு விசாரித்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது.
அப்போது, தலைமை நீதிபதி தோஸ்த் முகமது கான் கூறியதாவது:
பாகிஸ்தானில் உணவு பாதுகாப்பு அவசர சட்டம் 1965 நடைமுறைக்கு ஒத்துவராததாக உள்ளது என்று இந்த நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இதில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது கலப்பட எண்ணெய்யில் கபாப் தயாரிப்பதும், இறந்த விலங்குகளின் இறைச்சிகளில் இருந்து கபாப் தயாரிக்கப்படுவது குறித்தும் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. குறைந்த உள்கட்டமைப்புகளை வைத்து கொண்டே ஒரு நிருபரால் இதுபோன்ற தவறுகளை கண்டுபிடித்து செய்தி வெளியிட முடிகிறது.
ஆனால், பல அரசு துறைகளுக்கு பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டுபிடித்து தடுக்க அதிகாரிகளால் முடியவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. பெஷாவர் உள்பட பல நகரங்களில் தரமற்ற கபாப் விற்பதை ஏன் கண்டறியவில்லை, அதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தலைமை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், சுகாதார துறை டைரக்டர் ஜெனரல், உணவு துறை டைரக்டர், பெஷாவர் போலீஸ் தலைவர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி தோஸ்த் முகமது கான் உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.