
Toshiba நிறுவனமானது 8 அங்குல அளவுடையதும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
இதன் தொடுதிரையானது 1280 x 800 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது.
இது தவிர பிரதான நினைவகமாக 2 GB LPDDR3 RAM, சேமிப்பு நினைவகமாக 64 GB வரை தரப்பட்டுள்ளது.
மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 329.99 டொலர்களாகும்.



Post a Comment