Headlines News :
Home » , » சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை தட்டி கழித்தால் பாரிய விளைவுகளை அரசாங்கம் சந்திக்கும் (Video, Photos)

சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை தட்டி கழித்தால் பாரிய விளைவுகளை அரசாங்கம் சந்திக்கும் (Video, Photos)

Written By Unknown on Friday, October 11, 2013 | 7:59 PM

தமிழ் தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தட்டி கழித்தது போல் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை தட்டி கழிக்க முடியாது. அவ்வாறு தட்டி கழித்தால் பாரிய விளைவுகளை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபை முழுமையாக இயங்க வேண்டும். அது சிறப்பாக செயற்பட வேண்டும். வாக்களித்த மக்களுக்காக எமது கடமைகளை சரிவர செய்ய வேண்டும். மாகாண சபை அதிகாரங்கள் ஊடக மக்களுக்கு கிடைக்கும் சேவைகள் வடக்கு மாகாண மக்களுக்கும் கிடைக்க வேண்டும். எவருடனும் நாம் மோதவேண்டிய தேவை இல்லை. எல்லோருடனும் ஒத்துழைத்து செயற்படவே விரும்புகின்றோம்.
இந்த நாட்டில் நியாமான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க பெற்று இந்த மக்கள் பாதுகாப்பாக கௌரவமாக சுயமரியாதையுடன் வாழவே விரும்புகின்றனர். அதனையே தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறி இருந்தோம். அதனை ஏற்றே மக்கள் எமக்கு வாக்களித்தனர். எனவே பிரிக்கப்படாத நாட்டுக்குள் ஐக்கியமாக வாழ தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இதனை எல்லோரும் ஏற்று கொள்ள வேண்டும்.
இவ்வளவு காலமும் இலங்கை அரசு தலைவர்கள் தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வில்லை. இன்றும் இந்த அரசு சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியாமல் திணறுகின்றனர். தமிழ் தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தட்டி கழித்தது போல் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை தட்டி கழிக்க முடியாது. அவ்வாறு தட்டி கழித்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info