இலங்கை நிர்வாக சேவை
Sri lanka Administrative Service - SLAS
இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிபரீட்சைக்கான வர்த்தமானி அறிவிப்பு 06.06.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பரீட்சையானது இலங்கையின் அதி உயர் உன்னத முதற்தர சேவையாக போற்றப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களும் போட்டியாளர்களும் மிகவும் அதிகம் என்பதால் இப்பரீட்சையின் போட்டித்தன்மை மிக உச்சத்தில் இருக்கும். எனவே தற்போதிருந்தே இப்பரீட்சைக்கு முறையான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இன்றிலிருந்தே கற்பதற்க ஆயத்தமாகுங்கள். இலங்கையில் உயர் பதவி வகிக்கும் ஆயிரத்தில் ஒருவனாக நீங்களும் மாறுங்கள்
இலங்கை நிர்வாக சேவை - தரம் III திறந்த போட்டிப் பரீட்சை, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை என்பனவற்று விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை நிர்வாக சேவை - தரம் III (திறந்த போட்டிப் பரீட்சை)
- எழுத்துப் பரீட்சை : 5 வினாப்பத்திரங்கள்
- பொது விவேகம்
- இலங்கையின் சமூக, பொருளாதார அரசியல் பின்னணி மற்றும் அதன் போக்குகள்
- சர்வதேச போக்குகள்
- முகாமைத்துவ விவேகம்
- ஆக்கபூர்வ, பகுப்பாய்வு மற்றும் தொடர்பாடல் திறன்கள்
- விண்ணப்ப இறுதித் திகதி : 07.07.2014
- பரீட்சைத் திகதி.- 2014 செத்தெம்பர் (கொழும்பு நகரில் நடாத்தப்படும்)
- நேர்முகப் பரீட்சை : 25 புள்ளிகள் வழங்கப்படும்.
ஆகக்கூடிய மொத்தப் புள்ளிகளைப் பெறுகின்ற பரீட்சார்த்திகளுக்காக பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும். (அனைத்துப் பாடங்களிலும் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்)
- நியமிக்கப்படவுள்ள ஆட்களின் எண்ணிக்கை : 172 ஆகும்
- கல்வித் தகைமை : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வினால் பட்டத்தினை வழங்கும் நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிறுவனமொன்றினால் வழங்கப்படும் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல். (Effective date : before 07.07.2014)
- வயது : விண்ணப்பம் கோரப்படும் இறுதித் திகதியன்று 22 வயதிற்கு குறையாமல் 28 வயதினை அடையாதவராக இருத்தல் வேண்டும். (இறுதித் திகதி : 07.07.2014)
- வரையறை : திறந்த போட்டிப் பரீட்சையில் (2) தடவைகளுக்கு மேல் தோற்றமுடியாது.
- கட்டமைப்பு நேர்முகப் பரீட்சை : 25 புள்ளிகள்
1.
முகாமைத்துவப் பண்பு
: 10
2.
தலைமைத்துவப் பண்பு
: 05
3.
தொடர்பாடல் திறமை
: 05
4.
ஆளுமை
: 05
- சித்தியடைபவர்கள் நியமிக்கப்படும் பதவிகள் :
செயலாளர் நாயகம், செயலாளர், பிரதிச் செயலாளர், உதவிச் செயலாளர், ஆணையாளர் நாயகம், ஆணையாளர், பிரதி ஆணையாளர், உதவி ஆணையாளர், பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், கட்டுப்பாட்டாளர்
- எழுத்துப் பரீட்சைப் பாடத்திட்டம்.-
(1) பொது விவேகம் :
(நேரம் : 1 ½ மணித்தியாலம் - 100 புள்ளிகள், - பல்தேர்வு வினா, சுருக்க விடைகளுக்கான வினா)
எண் ரீதியான, மொழி ரீதியான மற்றும் உருவ ரீதியான கட்டமைப்புக்கள் மற்றும் இடைத்தொடர்புகள் என்பவற்றுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்படும் சிக்கல்கள் தொடர்பில் பகுப்பாய்வுத் திறன், தர்க்க விவேகம், பொருள்கோடல் திறன் என்பவற்றை ஏனையவற்றுடன் தாடர்புபடுத்தும் ஆற்றல் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பாக பரீட்சார்த்தியிடம் காணப்படும் உளச்சார்பு மட்டத்தினை அளவிடுதல் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
(2) இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணி மற்றும் அதன் போக்குகள்
(நேரம் : 3 மணித்தியாலம் - 100 புள்ளிகள், - பல்தேர்வு வினா, சுருக்க விடைகளுக்கான வினா, அமைப்புக் கட்டுரை)
இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிலைமைகள் தொடர்பான விடய அறிவு அல்லது பரீட்சார்த்திக்கு முன்வைக்கப்படும் நிலைமைகளுடன் ஆக்கப{ர்வமாகவும் பகுப்பாய்வுடனும் விமர்சன ரீதியாகவும் சிந்தனை செய்யும் ஆற்றல் முன்னுரிமையினைத் தீர்மானிக்கும் ஆற்றல் மற்றும் உபாயமார்க்க ரீதியாக எதிர்வுகூறும் ஆற்றல் தொடர்பாக பரீட்சார்த்தியின் ஆற்றல்களை அளவிடுதல் இங்கு எதிர்பார்க்கப்படுகிறது.
(3) சர்வதேச போக்குகள்.-
(நேரம் : 3 மணித்தியாலம் - 100 புள்ளிகள், - பல்தேர்வு வினா, சுருக்க விடைகளுக்கான வினா, அமைப்புக் கட்டுரை)
சர்வதேச சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிலைமைகள் தொடர்பான விடய ஆய்வு அல்லது பரீட்சார்த்திக்கு முன்வைக்கப்படும் நிலைமைகளுடன் ஆக்கப{ர்வமாகவும், பகுப்பாய்வுடனும் விமர்சன ரீதியாகவும் சிந்தனை செய்யும் ஆற்றல் முன்னுரிமையினைத் தீர்மானிக்கும் ஆற்றல் மற்றும் உபாயமார்க்க ரீதியாக எதிர்வுகூறும் ஆற்றல் தொடர்பாக அல்லது பரீட்சார்த்தியின் ஆற்றல்களை அளவிடுதல் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
(நேரம் : 3 மணித்தியாலங்கள் - 100 புள்ளிகள்). இவ்வினாப்பத்திரம் அமைப்புக் கட்டுரை மற்றும் கட்டுரை வினாக்கள் மற்றும் பல்தேர்வு வினாக்கள், சுருக்க வினாக்கள்
(4) முகாமைத்துவ விவேகம்.-
(நேரம் : 3 மணித்தியாலம் - 100 புள்ளிகள், - பல்தேர்வு வினா, சுருக்க விடைகளுக்கான வினா)
சிக்கல்களையும் அவற்றிற்கான காரணங்களையும் கண்டறிதல், தீர்மானங்களை மேற்கொள்ளல், ஆளிடைத் தொடர்புகளைப் பேணுதல், தொடர்பாடல் திறன், சுய ஒழுக்கநெறிக் கொள்கைகள், உபாய மார்க்கங்களை வகுத்தல் என்பவற்றில் பரீட்சார்த்தியின் ஆற்றலையும் மற்றும் கருத்துரு மற்றும் புலமை அம்சத்திலுள்ள பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலைகளின் சூழமைவில் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பரீட்சார்த்தியின் ஆற்றலையும் அளவிடுவதற்காக இவ்வினாப்பத்திரம் வடிவமைக்கப்படுகின்றது.
(5) ஆக்கப{ர்வமான பகுப்பாய்வு ரீதியான மற்றும் தொடர்பாடல் திறன்கள்.-
(நேரம் : 3 மணித்தியாலங்கள் - 100 புள்ளிகள்)
தரப்பட்ட தலைப்புக்கள் / மையக் கருத்துக்களிலிருந்து பரீட்சார்த்தியினால் தெரிவுசெய்யப்படும் தலைப்பு / மையக்கருத்து என்பவற்றினூடாக கருத்துக்கள் மற்றும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல், கோப்புப்படுத்தல் மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பாக பரீட்சார்த்தியின் தர்க்கிக்கும் ஆற்றல் மற்றும் கற்பனை சக்தி என்பவற்றை அளவிடுவதோடு சிக்கலான பந்தியொன்று, ஆவணமொன்று அல்லது விஞ்ஞாபனமொன்றினை விளங்கிக்கொள்ளல் மற்றும் அதன் கருப்பொருளினை சொந்த வசன நடையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் மற்றும் சரியான முறையிலும் தெரிவிப்பதற்கான பரீட்சார்த்தியின் ஆற்றலை அளவிடுதல் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை நிர்வாக சேவையில் இணைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
|
ஆண்டு
|
சிங்களவர்
|
தமிழர்
|
சோனகர்
|
மொத்தம்
|
|
2009
|
90
|
0
|
1
|
91
|
|
2011 (2012)
|
244
|
15
|
11
|
270
|
|
2012 Dec
|
0
|
30
|
14
|
44
|
|
2013
|
108
|
2
|
3
|
113
|
|
2014(limited)
|
24
|
4
|
1
|
29
|
|
கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம்
|
(85.2%)466
|
(9.3%)51
|
(5.5%)30
|
547
|