Headlines News :

    பார்வையாளர்கள்

    உலக சூழல் தினம் - 2014

    ஐக்கிய நாடுகள் சபையினால் வருடந்தோறும்ஜுன் மாதம் 05 ஆம் திகதி சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருடம் சூழல் தினமானது "காலநிலை மாற்றமும் சிறிய தீவுகளும்" என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

    வந்தாறுமூலையில் கடை கொள்ளையடிப்பு.

    இன்று மாலை 6. 30 மணியளவில் வந்தாறுமூலையில் அம்பலத்தடி சந்தியில் உள்ள கடை ஒன்றில்  இனம் தெரியாதோரால் கொள்ளையடிப்பு இடம் பெற்றுள்ளது.


    2014 யூன் வருமான நிலுவைகளை சேகரிக்கும் மாதமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களினால் பிரகடனம்

    2014 யூன் மாதத்தினை வருமான நிலுவைகளை அறவீடு செய்யும் மாதமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகரத்தின் எல்லைக்குட்பட்ட சகல வட்டாரத்திலும் சோலை வரி நிலுவையும் வியாபார மற்றும் வரிகளுமாக சுமார் ரூபா 100 மில்லியன் உள்ளது.

    இதன் முதற்கட்டமாக வரியிறுப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்க துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையினை ஆணையாளர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

    1ம் வாரம் (02.06.2014 – 07.06.2014)
    மக்களை விழிப்பூட்டும் நிகழ்வு

    2ம், 3ம் வாரம் (09.06.2014 – 20.06.2014)
    வீடு வீடாகவும் வியாபார நிலையங்களுக்கும் நிலுவை உள்ளவர்களிடம் அறவீடு செய்தல்

    4ம் வாரம் (23.06.2014 – 28.06.2014)
    ஆதனவரி நிலுவைகள் அதிகமாக உள்ள பிரதேசங்களில் மாநகர கட்டளைச்சட்டம் 252வது பிரிவிற்கிணங்க வரியிறுப்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக வரி செலுத்த தவறியிருப்பின் அவரது வீட்டில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடுக்கட்டு நடவடிக்கை மூலம் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டு நிலுவை அறவீடு செய்யப்படும்.

    அதேவேளை தொடர்ச்சியாக 10 வருடமாக 10 வீத கழிவுடன் வரி செலுத்திய வரியிறுப்பாளர்களை பாராட்டி கௌரவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

    சித்தாண்டியில் அனர்த்த முகாமைத்துவ கூட்டம்.

    (Sanjee)ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிருவுக்குட்பட்ட சித்தாண்டி-4 பிரதேசத்தில் இன்று (20.05.2014) பி.ப 3.00 மணியலவில் அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இடம் பெற்றது .

    மட்டு.மாநகரசபையில் சோலை வரி பற்றுச் சீட்டு கணினி மூலம் வழங்கும் நடைமுறை ஆரம்பித்துவைப்பு

    மட்டக்களப்பு மாநகர சபை சோலை வரி பற்றுச் சீட்டு கணினி மூலம் வழங்கும் நடைமுறை மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களால் 19.05.2014 அன்று வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

    இதனைத் தொடர்ந்து சோலை வரி பதிவுகள் மற்றும் அறவீடுகள் அனைத்தும் கணினி மூலம் இலகுவாகவும் மக்களின் நேரத்தை மீதப்படுத்துமுகமாகவும் அமைந்துள்ளது. 

    மேலும், இச்செயற்றிட்டம் எதிர்காலத்தில் இணையதளம் மூலம் சோலை வரி செலுத்தும் நடைமுறையை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.


    போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்கு 29 பேர் தெரிவு!

    இலங்கை நிருவாக சேவை வகுப்பு 111 க்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்காக 2010இல் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையிலிருந்து 29பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனா. அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழு இவர்களது தெரிவை அங்கீகரித்துள்ளது. மேற்படி பரீட்சையிலிருந்து தெரிவாகும் இரண்டாவது அணி இதுவாகும். இவர்களில் 24 சிங்களவர்களும் 04 தமிழர்களும் 01 முஸ்லிமும் அடங்குவார்கள். கிருஸ்ணபிள்ளை இளங்குமுதன் (காரைதீவு) ரி.யாகோப் அதிசயராஜ் (திருக்கோவில்) எம்.சுலோசனா(யாழ்ப்பாணம்) எஸ்.யோகராஜா (மட்டக்களப்பு) எம்.எ.சி.அகமட் நசீல் ஆகியோரே தெரிவான சிறுபான்மையினராவர். இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை பரீட்சை எடுத்த தடவைகள் உறுதிப்படுத்தல் போன்ற நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் வெகுவிரைவில் நியமனக்கடிதங்கள் வழங்கப்படும் என அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்

    கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புலன் அற்றவர்களுக்கான கிரிக்கட் போட்டிகள்

    கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புலன் அற்றவர்களுக்கான இரண்டு நாள் கிரிக்கட் பயிற்சியினை இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவிப்பொது முகாமையாளருடன் இணைந்து ஆரம்பித்து வைத்தபோது.......... இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 18.05.2014ம் திகதி மாவட்ட ரீதியிலான 20-20போட்டிகள் இடம்பெறவுள்ளது......

    மட்டு மாநகர சபையினரால் கல்லடி கடற்கரை துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது

    சுற்றுலா பிரதேசமான கல்லடி கடற்கரை பகுதி மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு.மா.உதயகுமார் தலைமையில் இன்று (12.05.2014) மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களால் துப்பரவு செய்யப்பட்டது. சுனாமி அனர்த்தம் மூலம் மண்ணிற்குள் புதையுண்டிருந்த கட்டட சிதைவுகள் அகற்றப்பட்டதுடன் பிளாஸ்டிக் போத்தல்கள், கண்ணாடிப் போத்தல்கள் மற்றும் பற்றைகளும் அகற்றப்பட்டன. மேலும், அப்பகுதி வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டு  சுற்றுலாப் பயனிகளுக்கு ஏற்ற வகையில் மேலதிகமாக மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு கடற்கரை நிலம் குழிகள் இன்றி சீராக்கப்பட்டது.








    450 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புற்று நோய் வைத்தியசாலை

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சின் 450 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி நவீன வசிதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

    கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் தனியான  கட்டிடத்தில்  4 மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுவரும் இப் புற்று நோய் வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

    இவ் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் உட்பட பொறியியலாளர்கள் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் 07-05-2014 இன்று புதன்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இப் புற்று நோய் வைத்தியசாலை மட்டக்களப்பில் திறக்கபடுவதால் மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணாமலை ஆகிய மாவட்ட மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

    4 மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுவரும் இப் புற்று நோய் வைத்தியசாலையில் வெளி நோயளர் சிகிச்சை பிரிவும், 80 பேர் தங்கி சிகிச்சை பெரும் விடுதி வசதியும், 10 பேர் தங்கி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெரும் வசதியும் இதில் உள்ளதாக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.

    இங்கு அமைக்கப்பட்டுவரும் புற்று நோய் வைத்தியசாலை போன்று இலங்கையில் மஹரகம,கண்டி,காலி கராப்பிடிய,யாழ்ப்பாணம் போன்ற பல்வேறு வைத்திய சாலைகளில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    தற்போது இப் பிரதேசத்திலுள்ள நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக வௌி மாவட்டங்களான கண்டி,மஹரகம போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு

    கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு இன்று  கல்லடிகிறீன் கார்டன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

    இதில் அண்மையில் நடைபெற்ற அசாதாரண விடயங்களா பற்றி ஊடகங்களுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

    அதன் எழுத்து வடிவம் 

    கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு - 07.05.2014

    பல்கலைக்கழகத்தில் மாணவர் செயற்பாடுகளையும் மாணவர் ஒன்றியத்தையும் முடக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து மாணவர் நலனில் அக்கறை செலுத்தாமல் தனது ஆதாயத்துக்காக  உபவேந்தர் செயற்பட்டு வருவது கண்கூடாக தெரிகிறது.

    கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பாரிய அபிவிருத்தி நடைபெறுவதாக வெளித்தோற்றத்தை காட்டுகிறார். ஆனால் இந்த பல்கலக்கழகத்தில் நடைபெறுவது என்ன?
    பல்கலைக்கழக அபிவிருத்தி என்பது எதனில் தங்கியுள்ளது 
    மாணவர்களின் கல்வித்தரத்திலா இல்லை புதிதாக திறக்கப்படும் கட்டிடங்களிலா? இங்கே உதாரணமாக கலை கலாசார பீட மாணவர்களின் விரிவுரைகளுக்கு இருந்து கல்விகற்க அத்தனை மாணவர்களுக்கும் வைத்து எழுத கதிரைகள் இல்லை, செயன்முறை வகுப்புகள் ஒரே வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு அல்லது நான்கு பிரிவுகளாகவே பிரித்து கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறுகின்றது இவற்றுக்கு மேலாக யுத்த கால கிழக்கு பல்கலைக்கழக நடைமுறைகளை போலவே தற்பொழுதும் மூன்று வருட  கல்வி செயற்பாடுகள் நான்கு வருடங்களாகவும் நான்கு வருட கல்வி செயற்பாடுகள் ஐந்து வருடங்களாகவும் நடைபெறுகின்றது இவற்றிலே எங்கே கடந்த இரண்டு வருடங்களாக பல்கலைக்கழகத்தில் பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது?

    அரசாங்கம் பாரிய நிதியை வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக ஒதுக்குகிறது.   அத்துடன் கிழக்கு பல்கலைக்கழத்துக்காக கணிசமான நிதியை உயர்கல்வி  அமைச்சு ஒதுக்கி உள்ளது. இதை எந்த உப வேந்தர் இருப்பினும் அரசாங்கம் செய்யும். இதில் எந்த ஒரு நிதியும் தற்போதைய உபவேந்தர் அவர்களால் வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்படதில்லை அனைத்துமே அரசாங்கம் ஒதுக்கிய நிதி.

    இவ்வாறு இருக்க இந்த உபவேந்தர் வந்ததால்தான் பல்கலைக்கழகத்துக்கு கட்டிடங்களே வந்தது என்றும் இவர் இல்லை எனில் அபிவிருத்தியே இல்லை எனவும் பொது மக்களை நம்ப வைத்து தான் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் ஊழலுக்கும் அபிவிருத்தி எனும் சாயம் பூசுகிறார்.
    இவற்றை தட்டி கேட்க போகும் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களை அடியோடு வேரறுக்க நினைக்கிறார். முதலில் விரிவுரையாளர்கள் பழிவாங்கப்பட்டனர் பின்னர் ஊழியர்கள் தற்பொழுது தங்கள் உரிமையை கேட்கப்போன மாணவர்கள்.  

    அதிலும் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளை பகிரங்கமாக அறிவித்த பின்னரே  அவர் அதற்கு உரிய  ஒழுக்காற்று குழுவை கூட்டுகிறார் அதற்கு தற்போதைய உதாரணம் அவரை தாக்கியதாக பழி சுமத்தி விட்டு குறித்த மாணவரின் மாணவர் பதிவை ரத்து செய்து காட்டுகிறேன் என்று பகிரங்கமாக கூறி இருப்பதானது தனி மனித பழிவாங்கல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின்  இறுதி வடிவமாகும்.

    கடந்த மாதம் 3௦ ம் திகதி 2ம் 3ம் வருட மாணவர்களுக்கு கல்வி  நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் மற்றும், ஏற்கனவே அனுமதி கேட்கப்பட்டு மறுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கிடையான விளையாட்டு போட்டிகளில் பங்குபற்ற அனுமதி வேண்டும் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி எமது பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த போது எதற்காக எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, பொது மாணவர் சங்கத்தை கலைத்தது எதற்காக என்ற கேள்விகளை முன்வைத்து அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டமே நடத்தப்பட்டது இது மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும் .

    ஒரு நாள் முழுக்க நின்றும் தன்னை சந்திக்க மறுத்த உபவேந்தர் நான்கு மாணவர்களுக்கு வகுப்பு தடை விதித்து ஒரு திட்டமிட்ட பழிவாங்கல் முயற்சியை மேற்கொண்டார்
    நான்கு மாணவர்களுக்கும் வகுப்பு தடை விதிப்பதாக கூறிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
    “ஆரம்பக்கட்ட விசாரணையின் பொது நீங்கள் குற்றம் இழைக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளீர்
    1.    பல்கலைக்கழக நிர்வாகத்தை குழப்பியதோடு பல்கலைக்கழகத்தில்  இடம்பெற்ற ஒரு அனுமதிக்கப்பட்ட நிகழ்வினை குழப்பியமை
    2.    பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளே, வெளியே இருந்தும் குழப்பியமை”
    ஆனால் எந்தவொரு விசாரணையும் நால்வருக்கும் நடத்தப்படவில்லை, அத்துடன் அன்றைய தினம் பல்கலைக்கழக நிகழ்வானது எந்த வகையிலும் குழப்பப்படவில்லை. அதற்கு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளே சாட்சி. அன்றைய தினம் உபவேந்தர் திட்டமிட்ட வகையில் பழிதீர்க்கும் விதமாக மாணவர் தலைவர்களை இனங்கண்டு வகுப்புத்தடை விதித்துள்ளார் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள்
    1.    மாணவர் ஒன்றிய தலைவர்
    2.    கலை கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர்
    3.    வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியத்துக்கு தலைவராக முன்மொழியப்பட்ட மாணவன்
    4.    வர்த்தக முகாமைத்துவ பீட “பீட அவை” மாணவர் பிரதிநிதி ஆகியோர் ஆவார்.   
             
    இதனை அறிந்த மாணவர்கள் அடுத்த நாள் சிரேஷ்ட மாணவர் ஆலோசகரிடம் மேற்குறிப்பிடப்பட்ட நான்கு மாணவர்களுக்குரிய வகுப்புத்தடை உத்தரவை மீள பெறுமாறு அனைத்து மாணவர்களும் கையொப்பம் இட்டு கோரிக்கை ஒன்றை கையளித்த பொழுது அது தொடர்பாக உபவேந்தரிடம் கலந்துரையாடிய சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் உபவேந்தர் கூறியதாக பின்வரும் மூன்று நிபந்தனைகளை முன்வைத்தார்.

    1.    ஊடகங்களுக்கு வழங்கிய தவறான செய்திகளுக்கு ஊடகங்களூடாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்
    2.    அனைத்து மாணவர்களும் தன்னிடம் கையொப்பம் மூலமாக மன்னிப்பு கேட்க வேண்டும்
    3.    இவை இரண்டும் இடம்பெற்றாலும் குறிப்பிட்ட நான்கு மாணவர்களுக்கும் ஒரு வருடத்துக்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என கூறினார்.
    இதனை அடுத்து சம்மந்தப்பட்ட நான்கு மாணவர்களும் தங்கள் வகுப்புத்தடை தொடர்பாக மீள்பரிசீலனை செய்யுமாறு உப வேந்தருக்கு கடிதம் ஒன்றை எழுதி சிரேஷ்ட மாணவர் ஆலோசகரிடம் கொடுத்தனர் ஆயினும் உடனடியாக தன்னால் பதில் ஏதும் கூற முடியாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் உபவேந்தரை சந்திப்பதற்காக உபவேந்தர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆயினும் காவலாளிகள் மாணவர்களை உள்ளே செல்லாது வாயில் கதவுகளை பூட்டினர்.பின்னர் மாணவர்கள் பலவந்தமாக உள்நுழைய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதன்பிறகும் மூதவை கட்டட தொகுதியில் சுமார் 2 மணி நேரமாக காத்திருந்தும் உபவேந்தரை சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கிடையில் தொடர்பாளர்களாக அங்கே குவிக்கப்பட்ட போலீசாரே செயற்பட்டனர். பலமுறை போலீசார் உபவேந்தரை எங்களுடன் பேசவைக்க மேற்கொண்ட முயற்சிகள் மேற்கொண்டும்  உபவேந்தரினால் அது  நிராகரிக்கப்பட்டது அத்துடன் உபவேந்தர் மாணவர்களை சந்திப்பதை விரும்பவில்லை என தலைமை போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.   

    ஆயினும் மாணவர்கள் கலைந்து செல்லாது தாம் உபவேந்தரை சந்தித்தே செல்வோம் என்ற முடிவில் உறுதியாக இருந்தனர். மீண்டும் மேலதிக போலீசார் குமிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் உப வேந்தர் வீட்டுக்கு செல்ல அழைத்து செல்லப்பட்டார்.

    இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியிலும் மாணவர் ஒன்றிய தலைவர் தன்னை தாக்கியதாக வீண்பழி சுமத்தியது வேதனைக்குரிய விடயமாகும். நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் உபவேந்தரை தாக்கியதாக கூறுவது சாத்தியமற்றதுடன் அவரை தாக்கியதாக கூறி குறிப்பிட்ட இறுக்கமான சூழ்நிலையை பயன்படுத்தி தன்னை தாக்கியதாக கூறுவதானது தனிப்பட்ட பழிவாங்கல் என்பது தெட்டதெளிவாக தெரிகிறது.
    இவ்வாறான செய்திகளை கூறுவதால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பற்றிய பிழையான அபிப்பிராயங்களை சமூகத்தின் மீது உபவேந்தர் விதைத்துள்ளார்.

    இவ்வாறான பழிவாங்கல் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெறும் வரை மாணவர்கள் ஓய மாட்டார்கள்.

    இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பத்திலும் உபவேந்தர் சிங்கப்பூர் சென்றுள்ளார் இது எவ்வகையில் சரியானதாகும். இந்த செயற்பாடானது உபவேந்தரின் பல்கலைக்கழகத்தின் மீதான பொறுப்புணர்வுக்கு ஐயப்பாடை ஏற்படுத்துகிறது.  .
         

    மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கான வைத்திய முகாம்

    (VSN)
    மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் மாநகர சபை ஊழியர்களின் உடல் நலன் பேணும் நோக்குடன் மட்-போதனா வைத்தியசாலையின் உதவியுடன் மாநகர மண்டபத்தில் நடாத்தப்பட்ட ஒரு நாள் வைத்திய முகாமில் (07.05.2014) மாநகர ஆணையாளர் உரையாற்றுவதையும் வைத்திய அதிகாரிகளான ஏ.ஏ.எம். புஹைம், திருமதி.ஜி.கௌரிபாலன், வைத்தியர் ஆரணி ஆகியோர் உடல் பரிசோதனை செய்வதையும் மற்றும் ஊழியர்களையும் படங்களில் காணலாம்.




    மலேசிய எம்.எச்.370 விமானம்: அல் கொய்தாவுடன் தொடர்புடைய 11 தீவிரவாதிகள் கைது

    மலேசிய எம்.எச். 370 விமானம் காணாமல் போனமைக்கு பின்னணியில் இருந்த சந்தேகத்தில் அல் - கொய்தாவுடன் தொடர்புடைய 11தீவிரவாதிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். 
     
    முஸ்லிம் நாடுகளில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த புதிய தீவிரவாத குழுவொன்றின் உறுப்பினர்களென நம்பப்படும் இந்த 11 பேரும் தலைநகர் கோலாலம்பூரிலும் கெடாஹ் மாநிலத்திலும் வைத்து கைது செய்யப்பட்டனர். 
     
    எப்.பி.ஐ. மற்றும் எம்.16 உள்ளடங்கலான சர்வதேச புலனாய்வாளர்களின் கோரிக்கையையடுத்தே மாணவர்கள் வழமைக்கு மாறான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்  இளம் கைம்பெண் உயர் தொழில் உத்தியோகத்தர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்படி குழுவினரை மலேசிய அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். 
     
    இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் 22 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாவர். 
     
    அவர்களிடம் காணாமல் போன எம்.எச்.370 விமானம் தொடர்பில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 
     
    எம்.எச்.370 விமானத்தில் பட்டியல் படுத்தப்படாத நிலையில் ஏற்றப்பட்டிருந்த 2.3 தொன் சரக்கு தொடர்பில் மலேசிய விமான சேவை தரவுகளை வெளியிட மறுத்துள்ளமை பல்வேறு ஊகங்களை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
     
    அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் மத்தியில் 200 கிலோகிராம் லிதியம் பற்றி இருந்ததை அந்த விமானசேவை ஒப்புக் கொண்டுள்ள போதும் தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டக் காரணங்களுக்காக அது தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்க முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளது. 
     
    எம்.எச். 370 விமானம் போராளிகளால் திசை திருப்பப்பட்டிருப்பதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச புலனாய்வாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் அதன் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத குழு தொடர்பில் பரந்தளவான அறிக்கையொன்றை அவர்கள் கோருவதாகவும் மலேசிய தீவிரவாதத்துக்கு எதிரான விசேட பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 
     
     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info